
மிக உயர்ந்த
உச்சத்திலிருந்து
உதிர்ந்து இறங்குகின்றன
இலைகள்...
அதற்குமேலான
பரந்து விரிந்த ஆகாயவெளியிலிருந்து
உதிர்ந்து இறங்குகின்றன
சிறகுகள்...
உயர்ந்ததின் உச்சம்
பணிதலென்பது பழைய ஞானம்
என்றாலும்
அது ஞானம்தான்..
தரைவிட்டெழும்பா
உறுதிசெய்யப்பட்டுவிட்ட மாயவாழ்வின்
சகலவிதிகளிலும் சிக்குண்டு
உதிர்ந்துவிடுகின்ற
மனித வாழ்வின் அத்தனை பிரயத்தனங்களும்தான்
எல்லாவித இரைச்சல்களுடனும்
எல்லா உயிர்களுக்குமான
இடையூறுகளுடனும்
இறங்குகின்றன எப்போதும்
உச்சமில்லை என்றுறுத்தி...
பின்குறிப்பாகவே...
ஒரு மனித உயிர் சாம்பலான
தருணத்தின் பொழுதுகளில்
எல்லா பறவைகளின் இசைக்கூறுகளும்
ஒரேயலைவரிசையில்
அசைந்தோடுகின்றன
கோடைமுடிந்து வருகின்ற
நிறைநதியாய்....
//உயர்ந்ததின் உச்சம்
ReplyDeleteபணிதலென்பது பழைய ஞானம்
என்றாலும்
அது ஞானம்தான்...//
//...எப்போதும்
உச்சமில்லை என்றுறுத்தி...//
யோசிக்க வேண்டிய விஷயம்தான்...
நிலாமகள் நன்றி.
ReplyDelete