Friday, October 29, 2010
ஜென் இலைகள் 2
ஒரு ஆழமான காயத்தின்
சீழ்பிடித்த வலியும்
நான் என் தந்தையைக்
கை ஓங்கிய தருணத்தின்
வலியும்
இப்போது என்பிள்ளை
என் கழுத்தைப் பிடித்தமுக்கிய
தருணத்தின் வலியும்
ஒன்றாகவே
உணர்த்தப்படுகின்றன
நெருக்கடியான சாலையின்நடுவே
திறந்த மார்புகளுடன்
அலையும் அந்த
மனம் பிறழ்ந்த பெண்ணின்
உணர்வான காலத்தின்
வலிகளைப் போலவே....
Labels:
ஜென் இலைகள் 2
Subscribe to:
Post Comments (Atom)
வலிகளின் கோர்ப்பு ரணங்களையும் ஆறாத வடுக்களையும் விட்டுச்சென்றது.மனம் கனக்கும் கவிதை.நிறைய எழுதுங்கள்.காத்திருக்கிறேன் வாசிக்க.
ReplyDeleteஉங்களின் வருகை எப்போதும் மகிழ்ச்சியானது சுந்தர்ஜி. நன்றிகள் பல.
ReplyDeleteஉங்க எழுத்துக்களில் கசியும் ஜீவகாருண்யம் குளிர் நீரில் கால் நனைத்த சிலிர்ப்பாய் நாடி நரம்பெங்கும் பரவுகிறது. வாழ்க!!
ReplyDeleteநிலாமகள்...
ReplyDeleteஉங்களின் அன்பான சொற்களுக்கு நன்றிகள்.