Monday, February 28, 2011

அது




பாதி மண்ணில் புதைந்தும்
புதைந்துவிடுவேன் மொத்தமும்
எனத் தெரியும் பாதியுமாய்
கிடந்தது அது...

அதுவும் பேசவில்லை
அதைப்பற்றி ஏந்திய மண்ணும்
உரைக்கவில்லையேதும்...

எதுவுமிருக்கலாம் அதன் மனதில்
யாரறிவார் படைத்தவனன்றி..

விருப்பமற்றவைகளுக்காக கொஞ்சம்
வெறுப்புக்களாய் கொஞ்சம்
கொன்றது கொஞ்சம் உயிரைத் தின்றது
கொஞ்சம்..
இரக்கமின்றித்தான் எல்லாவற்றையும்
உருவிய வதம் நிகழ்ந்தது...
ஒரு புள்ளியென அன்பு..
உதறலில் ஒரு ஆறுதல்..
சும்மா உரசலில் கொஞ்சம் சுகம்..
மற்றவையெல்லாம் சொல்வதற்கில்லை
யூகிக்கிறேனென்னால் அதற்குப் பொறுப்புமில்லை..


எழுதியதால்தான் இந்த நிலையென்கிறது
ஒரு கூட்டம்...
எழுதாமல் இருப்பதால்தான் இந்த கதியென்கிறது
ஒரு கூட்டம்...
என்னவெல்லா எழுதியதோ யார் கண்டா?
எத்தனை மரியாதை இருந்திருக்கும்
எத்தனை அவமானம் இப்போது

மனசில் கசிகிறது
அதன் கலைக்கப்படாத வாழ்வின்
தொடக்கம்...

எல்லோருக்கும்தான்..

2 comments:

  1. விருப்பமற்றவைகளுக்காக கொஞ்சம்
    வெறுப்புக்களாய் கொஞ்சம்
    கொன்றது கொஞ்சம் உயிரைத் தின்றது
    கொஞ்சம்..//

    கவிதையில் கசிகிறது புறக்கணிக்கப் பட்ட அதன் சொல்லொண்ணாத் துயரம்...

    ReplyDelete