Sunday, January 2, 2011
தெளிதல்
விளைந்தது யாவும்
விலைக்குள் அடங்காது,..
களைந்தது யாவும்
களங்கத்தில் அடங்காது...
வெந்தது யாவும்
பசியாற்றலில் அடங்காது...
மீந்தது யாவும்
கழித்தலில் அடங்காது...
தெளிந்தது யாவும்
வீடுபேற்றில் அடங்காது...
தேர்ந்தது யாவும்
திறத்தில் அடங்காது....
யாவும் யாவும் எண்ணில்
யாவற்றிலும் அடங்காது...
வெந்தது பதமாகும்
நொந்தது நுர்லாகும்
பதமும் நுர்லும்
ஞானமாகும்..தெளிதலில்
ஞானமுமொரு
படிக்கல்லாகும்...
படியாய் கிடந்து
தெளிவோம்...
Subscribe to:
Post Comments (Atom)
சுயம் நம்மில் தெளியும் வரை தேர்ச்சி பெற்றாலும் தெளிவில் அடங்காது
ReplyDeleteதெளிதலில் ஞானமுமொரு படிக்கல்லாகும்
ReplyDeleteபடியாய் கிடந்து தெளிவோமென்றால்
பாழும் எண்ணங்கள் தெளிவதில்லையே.
உண்மைதான் தினேஷ்குமார். நன்றி உங்களுக்கும் எண்ணப் பரிமாறலுக்கும்.
ReplyDeleteநன்றி ஜிஎம்பி ஐயா. படியப்படியத்தான் தெளியும் எதுவும். காத்திருக்கவேண்டும் படிந்தும்.
ReplyDeleteஉங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/01/blog-post_20.html
இன்று வலைச்சரத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வலைப்பூவை தமிழ் மணம், இன்ட்லியுடன் இணைக்கலாமே..
//தெளிதலில்
ReplyDeleteஞானமுமொரு
படிக்கல்லாகும்...
படியாய் கிடந்து
தெளிவோம்...//
வாழ்க்கையின் அடர்த்தி அப்படியே உங்கள் கவிதையின் வார்த்தைகளிலும்...
நல்ல கவிதை...அசத்தல் படம்.
ReplyDeleteவணக்கங்களும் மிகுந்த நன்றிகளும் பாரத்பாரதி. தங்களின் வருகை மகிழ்ச்சிக்குரியது.
ReplyDeleteவணக்கங்களும் நன்றியும் ஸ்ரீராம். தங்களின் வருகை மகிழ்ச்சிக்குரியது.
ReplyDelete