Sunday, September 12, 2010




கடவுளைக் கண்டேன்
கடவுளைப் பார்த்தேன்
கடவுளைத் தரிசித்தேன்

எது சரி?




வலி மிக வலியானது
மிக அனுபவமானது
மௌனத்தின் தருணத்தில்கூட....





சாலையில் சற்றுமுன் நடந்த
விபத்தின் நேரத்திலிருந்து
என்னைப் பின்னிறுத்தியது எது?




ஒரு துயரத்தின் வாசலை
திறக்கவும் மூடவும்
செய்கிறது அனுபவம்...




கொட்டுகிறது மழை
ரயில் பயணத்தில் இறக்கிவிட்ட
கண்ணாடி சன்னலின் வழியாக
தெரிகிறது தண்டவாளக் குடிசைகளில்
சிம்னிகள் தவம்...
மழையின் ஈரம் முழுக்க
மனத்தில் வழிகிறது..
போகிற போக்கில்
இறங்குகிற சந்திப்பிற்குள்
ஒரு நிமிடம் வேண்டுங்கள்
அந்த சிம்னிக்களுக்காக....

5 comments:

  1. படித்துக்கொண்டே வருகையில் சட்டென்று நெகிழ வைத்தது இறுதிக்கவிதை.உங்கள் மனம் என்னவென்று அது கோடிகாட்டியது.உங்களின் கவிதைக்குத் தனி இடம் காத்திருக்கிறது தோழர்.

    உதிரிலை என்ற தலைப்பு அசாதாரணமானதும் தத்துவார்த்தமானதும்.

    தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் வாழ்த்துகிறேன்.

    வலைப்பூவின் வண்ணத்தேர்வும், நிழற்படங்களின் தேர்வும் நேர்த்தியாக இருக்கிறது.

    எழுதுவதில் தனிமொழி உங்களுக்கு சித்தித்திருக்கிறது.

    ReplyDelete
  2. என் மனதில் உலாவிய அந்தக் கவிதை என் வலைத்தளத்தில் கொஞ்சநாட்கள் உலாவட்டும் உங்கள் அனுமதியுடன்.சரியா?

    ReplyDelete
  3. நன்றிகள் சுந்தர்ஜி. அனுமதி கேட்கவேண்டியதில்லை நண்பரே.

    ReplyDelete
  4. சிம்னிகளுக்காக வேண்டும் ஈர மனசுக்கும் சேர்த்து வேண்டுகிறோம்!

    ReplyDelete
  5. நன்றி நிலாமகள்.

    ReplyDelete