Thursday, July 1, 2010
ஜென் இலைகள்....
திறந்திருக்கிறது கதவு
ஏற்கெனவே....
இரைச்சலுடன் உள்ளேறுகிறது
புழுதிபோர்த்திய காற்று..
ஷோகேசில்
புன்னகையுடன்
புத்தர்...
சிரிக்கமுடியுமா?
முடியும்..
முடியாது..
அழமுடியுமா?
முடியும்..
முடியாது..
சற்று முன் உயிர்நீத்த
யாரின் உடலோ....
கறையான்
மனிதன்
விடுவதேயில்லை
மண்ணையும்
மனத்தையும்...
எல்லோருக்கும் எங்கும்
கிடைக்கிறது ஓர்
அவமானக்கத்தி
யார் மீதும் வீசவும்
யாரிடமிருந்தும் வாங்கவும்....
Labels:
ஜென் இலைகள்...
Subscribe to:
Post Comments (Atom)
//எல்லோருக்கும் எங்கும்
ReplyDeleteகிடைக்கிறது ஓர்
அவமானக்கத்தி
யார் மீதும் வீசவும்
யாரிடமிருந்தும் வாங்கவும்.... //
Extra ordinary