Friday, November 26, 2010

வாய்த்தல்




ஒவ்வொரு நாளும்
சாலைகளில்
கண்களறியாத உயிர்கள்
தொடங்கி
கன்றுக்குட்டிகள்
நாய்க்குட்டிகள்
ஆட்டுக்குட்டிகள்
கோழிக்குஞ்சுகள்
பூனைக்குட்டிகள்
இவற்றோடு
மனிதக் குட்டிகளும்

கண்ணுக்குத் தெரியாமல்
வரையப்பட்டிருக்கும்
மரணக் கத்தியில்
வெட்டுப்பட்டு
உயிரற்றதுவாய்...

மனசு கேட்கிறது
திடீரென்று வரும் மரணத்தில்
அவை என்ன நினைக்கும்?

எல்லாம் மறந்த நாளில்
முகமறியா குரல்வழி
விடை கசிகிறது..

பொசுக்குன்னு உயிர்போற
புண்ணியம் எல்லாருக்கும்
கிடைக்குமா?,........

கிடைக்குமா இதுதான்
சரியான விடையென்பதற்காதாரம்..?

2 comments:

  1. இருப்பையும் இல்லாமையையும் அதிகம் பேசுகின்றன உங்கள் கவிதைகள். இது மனமுதிர்வின் அடையாளம். வாழ்வை அகன்றாழமாய்ப் பார்க்கும் இந்தப் பார்வை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

    ReplyDelete
  2. தொடரும் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுந்தர்ஜி.

    ReplyDelete