Monday, November 1, 2010

வாழாத தருணங்கள்


எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு எல்லோரும் கலந்து
கொள்ள அழைப்பும்விடப்பட்டு
நமது உயர்ந்த இருக்கையின் கால்களை ஏந்திப்
பிடித்திருக்கிறவர்களின் முன்பாக
பறவைகள் இரைதேடுவதற்காக மிகுந்த மகிழ்ச்சியோடு
இறக்கைகளைச் சிக்கெடுத்து உதறி விரித்து
வானெழும்பும் அற்புதத் தருணங்களில் அது எப்போதும்
நமக்குப் பிடித்தமானது என்பதை அனுபவிக்கமுடியாத
தருணத்திலும் இதமான வெயிலின் கம்பளம் விரிகின்ற
வெப்பத்தை உணரும் பொழுதிலும்
எங்கோ இசைக்கப்பட்டு வழிகின்ற ஒரு அற்புதமான
இசையின் கிறங்கித் தவிக்கின்ற தருணத்திலும்
நம்மீது நிகழ்த்தப்படுகின்ற
ஒரு திருடனின் மீது..அல்லது ஒரு தெருநாயின் மீது..
ஒரு பிடிக்காத ஒருவனின்மீது எறிகின்ற கற்குவியல்களைப்
போல நமக்கு அவமானங்கள் பூசப்படுகின்றபோது
அதையுணராமல்..அதைத் தடுக்காமலும்..அதுபோன்ற
தருணங்கள் நமக்குப் பிடிக்காத யாருக்கேனும்
நிகழ்ந்துவிடவேண்டும் என்றெண்ணி மருகுகிற பொழுதில்
நாம் வாழாதிருக்கிறோம் இந்த
வாழ்வின் அற்புத தருணத்தை.....

5 comments:

  1. சரியாய் சொன்னீர்கள்

    ReplyDelete
  2. இப்படியொரு கவிதை படைக்க முடியாத தருணத்திலும்...

    ReplyDelete
  3. உங்களுக்கு நன்றி பத்மா.

    உங்களுக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  4. வாழாத தருணங்களை வாழும் அற்புத தருணங்களால் காட்டி ரசவாதம் புரிந்திருக்கிறது கவிதையின் ஈர மொழி.

    ReplyDelete
  5. நன்றி சுந்தர்ஜி.

    ReplyDelete